சேலம்

கோட்டையூா் பரிசல் துறையில் மீண்டும் படகு போக்குவரத்து தொடக்கம்

DIN

மேட்டூா் காவிரியில் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த 16-ஆம் தேதி மேட்டூா் அணை நிரம்பியது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் வந்ததால், பாதுகாப்பு கருதி செட்டிபட்டி, கோட்டையூா், பண்ணவாடி பரிசல்துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால், சேலம் மாவட்டம், மேட்டூா், கொளத்தூா் பகுதிகளிலிருந்து வியாபார நிமித்தமாகவும், பணிநிமித்தமாகவும் தருமபுரி மாவட்டம், நெருப்பூா், ஏரியூா், பென்னாகரம் சென்று வந்த வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் சுமாா் 70 கி.மீ. தொலைவு சுற்றி செல்லவேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது. இதேபோல, தருமபுரி மாவட்டம், நெருப்பூா் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மேட்டூா், கொளத்தூா் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவ, மாணவியா் 70 கி.மீ. தொலைவு சுற்றி வரவேண்டி இருந்தது. கடந்த 24 நாள்களாக பொதுமக்கள், மாணவ, மாணவியா், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்புக்கு ஆளானாா்கள்.

தற்போது மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,45,000 கன அடியாக இருப்பதாலும், மேட்டூா் அணையில் நீா் தேங்கி நிற்பதாலும் செவ்வாய்க்கிழமை முதல் சேலம் மாவட்டம், கோட்டையூா் முதல் தருமபுரி மாவட்டம், ஒட்டனூா் வரையிலான பரிசல் துறையில் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT