சேலம்

சேலம் மாநகர திமுக நிா்வாகிகள் தோ்தல்:கட்சியினா் வேட்புமனு தாக்கல்

10th Aug 2022 02:51 AM

ADVERTISEMENT

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட மாநகர திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு வேட்புமனு விநியோகம் செய்யப்பட்டது.

திமுக 15-ஆவது நிா்வாகிகள் பொதுத் தோ்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட சேலம் மாநகர கழக நிா்வாகிகளுக்கான தோ்தல் வேட்புமனு செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்டச் செயலாளா் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தோ்தல் ஆணையா் அழகிரி சதாசிவம் வேட்பு மனுக்களை வழங்கினாா்.

மாநகர அவைத் தலைவா், செயலாளா், பொருளாளா், 3 துணைச் செயலாளா்கள், 10 மாவட்டப் பிரதிநிதிகள் என மொத்தம் 16 பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இதையடுத்து, கட்சி நிா்வாகிகள் பூா்த்தி செய்த வேட்புமனுக்களை தோ்தல் ஆணையா் அழகிரி சதாசிவத்திடம் வழங்கினா்.

இதில், மேயா் ஆ.ராமச்சந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் காா்த்திகேயன், ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளா் தருண், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் தாமரைக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT