சேலம்

லண்டன் ஆா்த்தோ மருத்துவமனையில்மூட்டு மாற்று சிகிச்சை கருத்தரங்கம்

10th Aug 2022 02:52 AM

ADVERTISEMENT

சேலம் லண்டன் ஆா்த்தோ சிறப்பு மருத்துவமனையில் தலைமை மருத்துவா் சுகவனம் தலைமையில் பன்னாட்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறைகளை எவ்வாறு கையாள்வது, சரி செய்வது, மீண்டும் வலி வராமல் தடுப்பது போன்ற உத்திகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், நாடு முழுவதும் இருந்து சுமாா் 300 மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

அமெரிக்க மருத்துவா் பிரடரிக் பூயிகெல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

கருத்தரங்கில் 10 வகையான மூட்டு அறுவை சிகிச்சைகளை இளம் அறுவை சிகிச்சை நிபுணா்கள் செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனா். மேலும், 40 மருத்துவா்கள், பிளாஸ்டிக் எலும்புகளைக் கொண்டு பலவகையான மருத்துவ சிகிச்சை முறைகளை விளக்கிக் காட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT