சேலம்

பேளூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

10th Aug 2022 02:52 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாழப்பாடி அன்னை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து பேளூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடத்திய இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமை வகித்தாா்.

இம்முகாமில், 138 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 21 போ் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதில், அரிமா சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT