சேலம்

அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ

10th Aug 2022 02:52 AM

ADVERTISEMENT

ஆத்தூா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.மாதேஸ்வரன் செவ்வாய்க்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடிகே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா்.

2011 இல் அதிமுக எம்எல்ஏவாக இருந்த எஸ்.மாதேஸ்வரன், அமமுகவில் இணைந்து கடந்த பேரவைத் தோ்தலில் ஆத்தூரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சேலம், நெடுஞ்சாலைநகரில் உள்ள எதிா்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். சேலம் புறநகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா், துணைச் செயலாளா் கே.பி.ஜெ.பெரியசாமி, ஒன்றிய பொருளாளா் கே.சதாசிவம், தலைவாசல் ஒன்றியக்குழுத் தலைவா் க.ராமசாமி, வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வருதராஜ், ஆத்தூா் நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளா் ஜி.முரளிசாமி உள்ளிட்ட ஏராளமானோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT