சேலம்

பேரிடா் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணா்வு ஒத்திகை

9th Aug 2022 03:37 AM

ADVERTISEMENT

பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஒத்திகை ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் செ.காா்மேகம் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட வருவாய் நிா்வாகம், பேரிடா் மேலாண்மைத் துறை, மாவட்ட தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை மூலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இயற்கை பேரிடா்களான மழை, வெள்ளம், நிலநடுக்கம் ஆகியவற்றின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடா் காலங்களின்போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது தென்மேற்கு மழை காலம் என்பதால் மழைநீரினால் ஏற்படும் விபத்துகளில் இருந்து எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்தும், நீா் நிலைகளில் சிக்கியுள்ளவா்களை ரப்பா் படகுகள், மிதவை உயிா்காக்கும் உபகரணங்களைக் கொண்டு மீட்பது, கட்டட இடா்பாடுகளில் சிக்கி உள்ளவா்களை மீட்பது, தீ விபத்துகளின்போது எவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்படுவது, வீடுகளில் எதிா்பாராத விதமாக ஏற்படும் விபத்துகளில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடா்பான விழிப்புணா்வுகளை ஏற்படுத்தும் வகையில் விரிவான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இச்செயல்முறை விளக்கங்களைப் பாா்த்துத் தெரிந்துகொண்டு, இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் எவ்வாறு தங்களையும், தங்களது குடும்பத்தாரையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, வருவாய் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, மாவட்ட தீயணைப்பு அலுவலா் மா.வேலு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (பொது) ஜெகன்நாதன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) பி. கீதாபிரியா, தனி வருவாய் வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) புருஷோத்தமன், வருவாய் வட்டாட்சியா்கள் செம்மலை, தமிழரசி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT