சேலம்

சுதந்திர தினம்: மதுக்கடைகளை மூட உத்தரவு

9th Aug 2022 03:36 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆக.15) சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள், மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டுமென அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT