சேலம்

அறிவுசாா் மையம் அமைக்க பூமிபூஜை

9th Aug 2022 03:39 AM

ADVERTISEMENT

ஆத்தூா், புதுப்பேட்டை கொல்லம்பட்டறை பகுதியில் ரூ. 3 கோடி செலவில் அறிவுசாா் மையம் அமைக்க பூமிபூஜை நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக நகராட்சி ஆணையா் வசந்தி வரவேற்று பேசினாா். நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், நகரதுணைச் செயலாளா் கலைச்செல்வி வேல்முருகன், அவைத் தலைவா் ஜி.மாணிக்கம், நகா்மன்ற உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். நகராட்சி பொறியாளா் வெங்கடாசலம் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT