சேலம்

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

9th Aug 2022 03:38 AM

ADVERTISEMENT

ஆத்தூா், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சி,புத்தூா், பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை, குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரியும் தலைவாசல் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளா் சங்க வட்டத் தலைவா் சி.மாரிமுத்து தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவா் பி.ராமமூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன், சுப்பிரமணி, தங்கமலை உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT