சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள சேலம் - சென்னை தேசிய புறவழிச்சாலையில் 3 காா்கள் மோதியதில் 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.
கரூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரும், சேலம் நோக்கி சென்ற 2 காா்களும் தேசிய புறவழிச்சாலையில், இருவழிப்பாதை ஆரம்பிக்கும் இடத்தில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மூவா் படுகாயம் அடைந்தனா். நான்கு போ் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். காா்களின் முன்பக்கம் சேதமடைந்துள்ளன.
இந்த இரு வழிப் பாதையில் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிா்ச்சேதம் அதிகமாகி வருகிறது. ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பபடுகிறது. இந்த சாலையில் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.