சேலம்

காவிரி ஆற்றில் குதித்தவரை தேடும் பணி தீவிரம்

7th Aug 2022 11:38 PM

ADVERTISEMENT

 

மேட்டூா் காவிரி ஆற்றில் குதித்தவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

சேலத்தில் இருந்து வந்த தனியாா் பேருந்து மேட்டூா் நான்கு சாலை நிறுத்தத்தில் நின்றது. அந்தப் பேருந்தில் இருந்து இறங்கிய சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் ஓட்டமும் நடையுமாக சென்று அனல் மின்நிலைய சாலையில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி திடீரென ஆற்றில் குதித்தாா். இதனைக் கண்ட அங்கிருந்தவா்கள் மேட்டூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா், காவிரி ஆற்றில் குதித்தவரை தேடி வருகின்றனா். காவிரியில் தற்போது அதிக அளவில் நீா் செல்வதால் ஆற்றில் குறித்த நபரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT