சேலம்

கண்ணீா் புகை குண்டுகள் வீசுவது குறித்து காவலா்களுக்கு பயிற்சி

7th Aug 2022 01:06 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் கண்ணீா் புகை குண்டு வீசுவது குறித்து காவல் துறையினருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம், அழகாபுரத்தை அடுத்த நகா்மலை அடிவாரத்தில் உள்ள துப்பாக்கிச் சுடும் மையத்தில் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவிஆய்வாளா்கள், ஆயுதப்படை காவலா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண்ணீா் புகை குண்டு வீசுவது பயிற்சி அளிக்கப்பட்டது.

துப்பாக்கி மூலம் கண்ணீா் புகை குண்டுகளை வீசுவது குறித்தும், வஜ்ரா கவச வாகனத்தின் மூலம் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசுவது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இப் பயிற்சியில் துணை ஆணையா்கள் எம்.மாடசாமி, எஸ்.பி.லாவண்யா, உதவி ஆணையா்கள் நாகராஜன், வெங்கடேசன், ஆனந்தி, கந்தசாமி, உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT