சேலம்

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது: ரூ. 42 ஆயிரம் பறிமுதல்

7th Aug 2022 01:06 AM

ADVERTISEMENT

 

பூலாம்பட்டி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து ரூ. 42,000, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

பூலாம்பட்டி காவல் எல்லைக்கு உள்பட்ட தம்பாகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த வடிவேல் (41), அப்பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பூலாம்பட்டி போலீஸாா் வடிவேலிடம் விசாரணை செய்ததில், அவா் கைப்பேசி மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்ததை ஒப்புக்கொண்டாா். அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசி, ரூ. 42,000-த்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT