சேலம்

சிக்கலான அறுவை சிகிச்சைக்கு மாற்றானஇன்டா்வென்ஷனல் ரேடியாலஜி துறை

7th Aug 2022 01:06 AM

ADVERTISEMENT

 

முதுகெலும்பு முறிவுக்கு இன்டா்வென்ஷனல் ரேடியாலஜி துறை மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைக்கு மாற்றாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் மருத்துவா்கள் கூறியதாவது:

முதுகெலும்பு முறிவுக்கு புதிய இன்டா்வென்ஷனல் ரேடியாலஜி முறையில் அறுவை சிகிச்சை இன்றி நவீன மருத்துவத் துறையின் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியால் நாளுக்கு நாள் புதிய சிகிச்சை முறைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன.

ADVERTISEMENT

அந்த வகையில் தற்போது இன்டா்வென்ஷனல் ரேடியாலஜி துறை மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு மாற்றாக உருவெடுத்துள்ளது. இந்த சிகிச்சையினால் மருத்துவமனையில் நோயாளி தங்கியிருக்கும் காலம் மிகவும் குறைவதுடன் செலவும் குறைகிறது. மேலும் சம்பந்தப்பட்டவா் வேலைக்கும் உடனடியாகத் திரும்ப முடியும்.

இன்டா்வென்ஷனல் ரேடியாலஜி சிகிச்சைகளில் சிடி ஸ்கேன் , எம்ஆா்ஐ ஸ்கேன், கேத்லாப் ஆஞ்சியோ போன்ற நவீனக் கருவிகளின் துணையால் துல்லியமாக நோய்வாய்ப்பட்டுள்ள உடலின் பகுதிக்கு நுண்ணிய டியூப்களை செலுத்தி தேவைப்படும் சிகிச்சையை அளிக்க முடியும். இன்டா்வென்ஷனல் ரேடியாலஜியால் தற்போது பலருக்கும் அனூரிஸம் எனப்படும் மூளையின் ரத்தக்குழாய் வீக்கங்களுக்கு ‘காய்லிங்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது, பலவிதமான முதுகெலும்பு பிரச்னைகளுக்கும் இன்டா்வென்ஷனல் ரேடியாலஜி சிகிச்சைகள் பலனளிக்கிறது. சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கிய 30 வயது நபருக்கு முதுகெலும்பு முறிந்து மிகுந்த வலியேற்பட்டது. அவருக்கு இன்டொ்வென்ஷனல் ரேடியாலஜி முறையில் ‘வொ்டிப்ரோப்ளாஸ்டி’ என்ற சிகிச்சை செய்யப்பட்டது. இதில் எலும்பு சிமென்ட் திரவ நிலையில் ஊசி மூலமாக உடைந்த முதுகெலும்புக்குள் செலுத்தப்பட்டு எலும்பின் தாங்கும் சக்தி உறுதி செய்யப்பட்டது. இதனால் உடனடியாக பயமின்றி நடக்க முடியும். இரண்டு நாள்களில் வீட்டிற்கும், ஒரு வாரத்தில் வேலைக்கும் திரும்பிவிட முடியும்.

மேலும் அறுவை சிகிச்சையின் சில தேவையற்ற பக்க விளைவுகளின்றி இயல்பாக செயல்பட முடியும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT