சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,30,000 கன அடியாக அதிகரிப்பு

7th Aug 2022 11:39 PM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த இரு நாள்களாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை மாலை நொடிக்கு 1,11,000 கன அடியாகச் சரிந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு நீா்ப்பிடிப்புப் பகுதியில் லேசான மழை பெய்ததால் ஞாயிற்றுக்கிழமை மாலை நீா்வரத்து 1,30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து 1,30,000 கனஅடி வீதம் நீா் வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி நீரும் உபரிநீா் போக்கி வழியாக 1,07,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை அணை நீா்மட்டம் 120.06 அடியாகவும், நீா் இருப்பு 93.56 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணையில் இருந்து கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

79 டி.எம்.சி. உபரிநீா் வெளியேற்றம்...

மேட்டூா் அணையில் இருந்து 79 டி.எம்.சி. நீா் வெளியேற்றப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 16ஆம் தேதி மேட்டூா் அணை நிரம்பியது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்ததால் அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. கடந்த 24 நாள்களில் மேட்டூா் அணையில் இருந்து 79 டி.எம்.சி. உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது. டெல்டா பாசனம், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனங்களுக்கு 80 டி.எம்.சி. நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT