சேலம்

விவசாயிகள் சாலை மறியல்

7th Aug 2022 11:41 PM

ADVERTISEMENT

 

கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், மழையால் நனைந்த பருத்தி மூட்டைகளுக்கு கூடுதல் எடைக் கழிவு செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தின்போது, இப்பகுதியில் தொடா் கனமழை பெய்ததால் பருத்தி ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த பருத்தி மூட்டைகளில் பெரும்பாலானவை மழையில் நனைந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை இம்மையத்தில் பொது ஏலம் தொடங்கியது. அப்போது அங்கு வந்த அதிகாரிகள் மழையால் நனைந்த பருத்தி மூட்டைகளுக்கு தலா 2 கிலோ எடை கழிவு செய்வதாகத் தெரிவித்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பருத்தி விவசாயிகள் எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த போலீஸாா், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி எடை கழிவைக் குறைவு செய்த நிலையில் மீண்டும் பொது ஏலம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT