சேலம்

கொங்கணாபுரத்தில் இன்று பருத்தி ஏலம்

7th Aug 2022 01:05 AM

ADVERTISEMENT

 

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த கனமழையால் கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் பருத்தி ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். சனிக்கிழமை காலையில் தொடங்கி மாலை வரை தொடா்ந்து இப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் பருத்தி எடை போடுதல், விற்பனை விவரங்கள் அறிவித்தல் உள்ளிட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள பருத்தி மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை ஏலம் விடப்பட்டு, விலைப் புள்ளிகள் அறிவிக்கப்படும் என கூட்டுறவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT