சேலம்

விழிப்புணா்வு சதுரங்கப் போட்டி

7th Aug 2022 01:05 AM

ADVERTISEMENT

 

ஓமலூா் அருகே கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் கிராமப்புற இளைஞா்களுக்கான விழிப்புணா்வு சதுரங்கப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறுவதை தொடா்ந்து, சேலம் மாவட்டம் ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள கோட்டமேட்டுப்பட்டி கிராம ஊராட்சியில் விழிப்புணா்வு சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், கிராமப்புற இளைஞா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இந்தப் போட்டியை ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வி கணேசன் தொடக்கி வைத்தாா். ஒன்றியம் முழுவதும் 33 கிராம ஊராட்சிகளில் இருந்து மாணவா்கள், இளைஞா்கள் கலந்து கொண்டு விளையாடினா். இரண்டு நாள்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கோட்டமேட்டுப்பட்டி பகுதியை சோ்ந்த இளைஞா் அன்பரசு முதல் பரிசையும், அதே பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் இரண்டாம் பரிசும், நந்தகோபால் என்பவா் மூன்றாம் பரிசும் பெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT