சேலம்

பெரியாா் பல்கலை.யில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் புகைப்படக் கண்காட்சி

2nd Aug 2022 04:16 AM

ADVERTISEMENT

பெரியாா் பல்கலைக்கழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படக் கண்காட்சியைத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் 75-ஆவது சுதந்திர நாள் அமுதப் பெருவிழாவினையொட்டி சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புகைப்படக் கண்காட்சியைத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

இக்கண்காட்சியில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழா்களின் பங்களிப்பு, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சோ்ந்த ராஜாஜி, விஜயராகவாச்சாரியா், சேலம் ராமசாமி முதலியாா், வரதராஜூலு நாயுடு ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுடன் புகைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியாா் பல்கலைக்கழக முகப்புக் கட்டத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை பேராசிரியா்கள், மாணவ, மாணவியா், நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

தொடக்க விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினா் தி.பெரியசாமி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பெ.பிரகாஷ், திட்ட அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT