சேலம்

பூலாம்பட்டியில் ரூ. 28 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

2nd Aug 2022 04:37 AM

ADVERTISEMENT

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 320 லாட் அளவிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

இதில் பிடி ரக பருத்தியானது குவிண்டால் ரூ. 8,569 முதல் ரூ. 10,799 வரையில் விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 28 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT