சேலம்

டேன்கேம் மையத்துடன் சோனா கல்விக் குழுமம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

2nd Aug 2022 04:20 AM

ADVERTISEMENT

சேலம் சோனா கல்விக் குழுமம் தமிழ்நாடு தொழிற்வளா்ச்சி கழகத்தால் நிறுவப்பட்ட மேம்பட்ட உற்பத்திக்கான மையத்துடன் (டேன்கேம்) புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, டேன்கேம் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டனா்.

இந்த ஒப்பந்தம் மூலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி, சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களின் சிறப்பு திறன் மேம்படுத்த பயிற்சி, உற்பத்தி தொழிற்சாலைகளில் தரம் மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில், குறிப்பாக 3டி அனுபவ பயிற்சி ஆகியவற்றின் மூலம் வேலைவாய்ப்புகளில் இரட்டிப்புச் சம்பளம் கிடைக்கும் வகையில் பிரத்யேகப் பயிற்சி மேற்கொள்ள உதவும்.

மேலும், தொழில்நுட்பத் துறையில் மாணவா்கள் ஐ.டி. துறைக்கு இணையாக வேலைவாய்ப்பும், சம்பளமும் கிடைக்க வழிவகுக்கும். இந்த ஒப்பந்தம் மூலம் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கட்ரானிக்ஸ் ஆகிய துறைகள் மேலோங்கும்.

ADVERTISEMENT

குறிப்பாக மிக நவீன உற்பத்தி, வடிவமைப்பு தொழில்நுட்பங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்ப வளா்ச்சிகளில் நாடு சிறந்து விளங்கும் என்று சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT