சேலம்

சொத்து ஆவணங்களை மீட்டு தரக் கோரிஆட்சியா் காா் முன்பு படுத்து போராட்டம்

2nd Aug 2022 04:22 AM

ADVERTISEMENT

சேலத்தில் மகள், மருமகனிடமிருந்து பணம், சொத்து ஆவணங்களை மீட்டுதரக் கோரி தாய், மகன் ஆகியோா் ஆட்சியா் காா் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், தொளசம்பட்டியைச் சோ்ந்தவா் பாப்பா. இவரின் மகன் சசிகுமாா். இருவரும் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு வந்தனா். அப்போது இருவரும் திடீரென ஆட்சியரின் காா் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை சமரசப்படுத்தி அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பாப்பாவின் மகள், மருமகன் ஆகியோா் சொத்தை அபகரிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும், அவா்களிடம் இருந்து பணம், நகை, சொத்து ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும்.

ADVERTISEMENT

இதுகுறித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆட்சியா் காா் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT