சேலம்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

2nd Aug 2022 04:20 AM

ADVERTISEMENT

நங்கவள்ளி அருகே குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னசோரகை ஊராட்சியில் கடந்த நான்கு நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இந்த நிலையில் திங்கள்கிழமை சின்னசோரகை ஊராட்சி மக்கள், நங்கவள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகில் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த நங்கவள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுதேவபிரபு, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மின்மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின் மோட்டாா் பழுதை நீக்கி ஓரிரு தினங்களில் குடிநீா் தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தாா். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT