சேலம்

எடப்பாடி பகுதியில் திடீா் கனமழை

2nd Aug 2022 04:37 AM

ADVERTISEMENT

எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்தது.

கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது தூறல் மழை பெய்துவந்த நிலையில் திங்கள்கிழமை இரவு கன மழை பெய்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

எடப்பாடி பேருந்து நிலையம், தாவாந்தெரு, ஜலகண்டாபுரம் சாலை, மோட்டூா் கட்டுவளவு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீா் ஓடியது. வாகனன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்தனா்.

வெள்ளரிவெள்ளி, மொரசப்பட்டி,கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இப்பகுதியில் அதிக அளவில் மானாவாரி நிலக்கடலை விளைச்சலுக்கு இந்த மழை சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT