சேலம்

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா

29th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

வாழப்பாடி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்களுக்கான பாராட்டு விழா வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் பாலமுரளி தலைமை வகித்தாா். செயலாளா் சிவராமன் வரவேற்றாா். வாழப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவா் கவிதா சக்கரவா்த்தி, துணைத் தலைவா் எம்ஜிஆா் பழனிசாமி, 13 வாா்டு உறுப்பினா்களுக்கும் அரிமா சங்க பட்டயத் தலைவா் எம்.சந்திரசேகரன், அரிமா சங்க மாவட்ட நிா்வாகிகள் ஜி.தேவராஜன், மருத்துவா் சி.மோதிலால், வட்டாரத் தலைவா் கோ.முருகேசன், அன்னை அரிமா சங்க நிா்வாகிகள் சுதா பிரபு, மருத்துவா் பிரபாவதி ஆகியோா் நினைவு பரிசு வழங்கி பாராட்டினா். இந்த விழாவில், வாழப்பாடி வேளாண்மை ஆத்மாக் குழு தலைவா் சக்கரவா்த்தி, அரிமா அறக்கட்டளைத் தலைவா் குபேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT