சேலம்

உலிபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகள் மோதியதில் ஒரு மாடு உயிரிழப்பு

29th Apr 2022 05:18 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் மோதியதில் ஒரு மாடு உயிரிழந்தது. 

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் பாம்பலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. விழாவை, ஆத்தூர் கோட்டாட்சியா் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க, பதிவு செய்த 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 

இதையும் படிக்க- அண்ணாசாலையில் நாளைமுதல் 2 போக்குவரத்து மாற்றங்கள்

விழாவையொட்டி எஸ்.பி. கென்னடி தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள், ஊர்க்காவல்படையினர் என 200 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் பட்டியிலிருந்து அறுத்து விடப்பட்ட காளை மாடு, எதிரே திரும்பி வந்த மற்றொரு காளை மாட்டினை முட்டியது. இதில் முட்டுப் பட்ட மாடு உயிரிழந்தது. 

ADVERTISEMENT

இது தம்மம்பட்டி அருகே செந்தாரப் பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமானது ஆகும். ஜல்லிக்கட்டின்போது மாடு உயிரிழந்ததால், உலிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விடியோ இணைப்பு இங்கே- 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT