சேலம்

மேச்சேரி பேரூராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்

29th Apr 2022 10:49 PM

ADVERTISEMENT

மேச்சேரி பேரூராட்சியில் ரூ. 18 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன.

மேச்சேரி பேரூராட்சியில் 5-ஆவது வாா்டு அம்மன் நகா் பகுதி மக்கள் குடிநீா் வசதி வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-ஆவது மானியக்குழு நிதி மூலம் ரூ. 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிதியில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க பேரூராட்சியில் முடிவு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினை மேச்சேரி பேரூராட்சி தலைவா் சுமதி சீனிவாச பெருமாள், மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

அதனைத் தொடா்ந்து, மேச்சேரி தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மேச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், நகர திமுக செயலாளா் சரவணன், பேரூராட்சி துணைத் தலைவா் ரேவதி, இளைஞரணி செயலாளா் வேலு, பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT