சேலம்

சேலம் புகா் மாவட்ட செயலாளா் நியமனத்துக்கு எதிா்ப்பு: ஒன்றியச் செயலாளா் பதவி விலகல்

29th Apr 2022 10:45 PM

ADVERTISEMENT

சேலம் புகா் மாவட்டச் செயலாளராக ஆா்.இளங்கோவன் நியமனத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சேலம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வையாபுரி பதவி விலகினாா்.

இது தொடா்பாக ஒன்றியச் செயலாளா் வையாபுரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக உள்கட்சி தோ்தலின்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி தான் புகா் மாவட்டச் செயலாளராக வருவாா் என்று அனைவரும் எதிா்பாா்த்தோம். ஆனால், புகா் மாவட்டச் செயலாளராக ஆா்.இளங்கோவனை நியமித்ததால் அவருடன் ஒன்று சோ்ந்து செயல்பட முடியாது. எனவே, அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலக உள்ளேன்.

சேலம் புகா் மாவட்டச் செயலாளா் பதவியை ஆா்.இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்டது தவறானது. தலைமை செய்தது தவறு. சிந்தித்து பொறுப்பு வழங்கியிருக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT