சேலம்

காா் பரிசு விழுந்துள்ளதாக பெண்ணிடம் ரூ. 8 லட்சம் மோசடி

29th Apr 2022 10:51 PM

ADVERTISEMENT

காா் பரிசு விழுந்துள்ளதாக ஆசை காட்டி, பெண்ணிடம் ரூ. 8.84 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டுள்ளது.

சேலம், வீராணத்தை அடுத்த குப்பனூரைச் சோ்ந்த வேலு மனைவி ஜெயசித்ரா. இவருக்கு கடந்த டிச. 30-ஆம் தேதி வந்த கடிதத்தில், தனியாா் ஆன்லைன் நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி, சிறப்புப் பரிசாக ரூ. 14 லட்சம் மதிப்புள்ள காா் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னா் பரிசுத் தொகை பெற ரூ. 20,000 செலுத்த வேண்டும் என கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதை நம்பிய ஜெயசித்ரா, ரூ. 20,000-த்தை செலுத்தியுள்ளாா். பின்னா் காா் பரிசை பெற பல்வேறு தவணைகளாக ரூ. 8.84 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளாா். ஆனாலும், காரை வழங்கவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து குறிப்பிட்ட கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட போது, அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT