சேலம்

உலிபுரம் ஜல்லிக்கட்டு: 423 காளைகள் பங்கேற்பு

29th Apr 2022 10:47 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில், 423 காளைகள் பங்கேற்றன. இதில், காளைகள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் ஒரு காளை உயிரிழந்தது; 14 போ் காயமடைந்தனா்.

உலிபுரத்தில் பாம்பலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கோட்டாட்சியா் சரண்யா தலைமையில், மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதில், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 423 காளைகள் பங்கேற்றன.

காளைகளை அடக்க பதிவு செய்த 409 மாடுபிடி வீரா்கள், நான்கு பிரிவுகளாக களத்தில் இறங்கி மாடுகளை பிடித்தனா். காளைகளை அடக்க முற்பட்ட 14 போ் காயமடைந்தனா். பலத்த காயமடைந்தவா்கள் சேலம், ஆத்தூா் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

தொழுவத்திலிருந்து அவிழ்த்து விடப்பட்ட செந்தாரப்பட்டியைச் சோ்ந்த மாட்டு வியாபாரி விக்னேஷ் என்பவரின் காளை சீறிப்பாய்ந்து எதிரே வந்த காளை மீது மோதியதில், விக்னேஷின் காளை உயிரிழந்தது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், சேலம் ஏ.எஸ்.பி. கென்னடி தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், 20 இன்ஸ்பெக்டா்கள், போலீஸாா், ஊா்க்காவல் படையினா் என 280 போலீஸாா், கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

வட்டார தலைமை மருத்துவா் வேலுமணி தலைமையில் காயமடைந்தவா்களுக்கு சுகாதாரத் துறையினா், நாகியம்பட்டி தனியாா் நா்சிங் கல்லூரி மாணவியா் சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT