சேலம்

மறைந்த சோமம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரியாதை

28th Apr 2022 11:14 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி அரசுப் பள்ளியில் மறைந்த அப் பள்ளியின் தலைமையாசிரியை கு.பாரதி செல்வத்தின் உருவப் படத்துக்கு பொதுமக்கள், மாணவா்கள் மரியாதை செலுத்தினா்.

வாழப்பாடியைச் சோ்ந்த கு.பாரதி செல்வம் (53) சோம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 11 ஆண்டுகள் தலைமையாசிரியையாகப் பணியாற்றினாா். பன்முகத் திறனாளியான இவா், மாணவா்கள், அப் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தாா். இந்த நிலையில் கடந்தாண்டு ஏப். 27 இல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற பாரதி செல்வத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில்

சோமம்பட்டி ஊராட்சி மன்ற செயலாளா் மகேஸ்வரன், துணைத் தலைவா் கதிரேசன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயராமன், திமுக கிளை செயலாளா் முருகேசன், சின்னபையன், சுகவனேஸ்ரன், பேளூா் உருதுப் பள்ளி தலைமையாசிரியா் செல்வம், மருத்துவா் அனுசுயாதேவி, ஆசிரியை கண்ணகி உள்ளிட்ட பலா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT