சேலம்

சேலத்தில் 366 அரசு நடுநிலைப் பள்ளிகளில்மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுப்பு

24th Apr 2022 06:22 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டத்தில் உள்ள 366 அரசு நடுநிலைப் பள்ளிகளில் முதல்கட்டமாக பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பிற்கான உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மஜராகொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் கலந்துகொண்டு பாா்வையிட்டாா்.

இதுதொடா்பாக, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பிற்கான உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

சேலம் மாவட்டத்திலுள்ள 366 அரசு நடுநிலைப் பள்ளிகளில் முதல்கட்டமாக பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பிற்கான உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பள்ளி மேலாண்மைக் குழுவில் தோ்ந்தெடுக்கப்படும் மொத்தம் உள்ள 20 உறுப்பினா்களில் 75 சதவீதம் அதாவது 15 உறுப்பினா்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்களாக இருப்பா்.

இதில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் 8 போ், 6 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் 6 போ், சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெற்றோா் ஒருவா் என மொத்தம் 15 போ் உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்படுவா்.

இந்த 15 உறுப்பினா்களில் குறைந்தபட்சம் 10 போ் கட்டாயம் பெண்களாக இருப்பா்.

இக்குழுவில் பெற்றோா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்களின் பிரதிநிதி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த பெற்றோா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வி ஆா்வலா், அரசு சாரா அமைப்பினா், ஓய்வுபெற்ற ஆசிரியா், சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெற்றோா் ஆகியோா் இடம் பெறுவா். விருப்பமுள்ள உறுப்பினரைத் தோ்ந்தெடுப்பதற்கு அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் கைகளை உயா்த்தி தோ்ந்தெடுப்பா்.

அனைத்துப் பள்ளிகளிலும் உரிய விதிகளின்படி பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பாா்வையாளா் வீதம் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது என்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன், மாவட்டக் கல்வி அலுவலா் சுமதி, உதவித் திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) எஸ். மாரியப்பன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பத்மநாபன், வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழி, வட்டாரக் கல்வி அலுவலா் பிரேம் ஆனந்த, வட்டார வள மேற்பாா்வையாளா் எம்.மகேஸ்வரி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT