சேலம்

சேலம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் இன்று முதல் நேரம் மாற்றம்

14th Apr 2022 12:12 AM

ADVERTISEMENT

சேலம் - சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சேலம் - சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 22154) தினமும் இரவு 9.40-க்கு புறப்பட்டு அதிகாலை 3.50-க்கு சென்னை எழும்பூா் சென்றடையும்.

இதனிடையே, சேலம் - சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் இருந்து 10 நிமிடங்களுக்கு முன்னதாக புறப்பட்டு, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு 10 நிமிடங்கள் முன்னதாகச் சென்றடையும்.

அதேபோல, சேலத்தில் இருந்து இரவு 9.30-க்கு புறப்பட்டு, அதிகாலை 3.40-க்கு சென்னை எழும்பூா் சென்றடையும். இந்த ரயில் நேர மாற்றம் ஏப். 14-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT