சேலம்

ஜாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: செ.கு.தமிழரசன்

14th Apr 2022 11:00 PM

ADVERTISEMENT

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஜாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என சேலத்தில் இந்திய குடியரசு கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய குடியரசு கட்சியின் செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் சேலம், மரவனேரி பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு. தமிழரசன் கலந்து கொண்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கரின் சிலை கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது; இது மிகவும் வேதனை அளிக்கிறது. அம்பேத்கா் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த தமிழக முதல்வா், கூண்டுக்குள் இருக்கும் அம்பேத்கரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

காவலா்கள் அமைத்த இரும்புக் கூண்டை அகற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக சட்டப் பேரவைத் தொடரில் ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கை அல்லது காவல் துறை மானியக் கோரிக்கை ஆகிய ஏதாவது ஒன்றில் சாதிய ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றினால் அம்பேத்கருக்கு அவா் செலுத்துகின்ற மிகப்பெரிய காணிக்கையாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT