சேலம் மாவட்டம், வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 38.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு, பல்வேறு பகுதியைச் சோ்ந்த 318 விவசாயிகள் 1,070 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், ஒரு குவிண்டால் ஆா்.சி.எச். ரக பருத்தி ரூ. 9,699 முதல் ரூ. 12,616 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ. 10,099 முதல் ரூ. 13,399 வரையும் விலை போனது. மொத்தம் ரூ. 38.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்பாலை உரிமையாளா்கள், முகவா்கள், வியாபாரிகள் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனா்.