வாழப்பாடி அருகே களைக்கொல்லி மருந்து குடித்து தச்சுத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் மேட்டுத்தெரு பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி தங்கவேலுக்கு (65), கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வயலுக்கு தெளிக்கப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
அவரது உறவினகள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கவேல் புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.