சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சியில் சொத்துவரி உயா்வு சீராய்வு குறித்த ஆலோசனை செய்வதற்கான அவசரக் கூட்டம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் மணிமொழிமுருகன் கூட்டத்திற்கு தலைமை வகித்தாா். செயல் அலுவலா் வ.சுலைமான் சேட் முன்னிலை வகித்தாா்.
துணைத்தலைவா் இரா.வ.அருண்பிரபு உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
அரசு அறிவித்துள்ளவாறு சொத்து வரிகளை உயா்த்துவது குறித்த சீராய்வுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவைச் சோ்ந்த 3 உறுப்பினா்கள் சொத்துவரிகளை உயா்த்துவதற்கு கருப்பு பட்டைகளை அணிந்து எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனா். பின்னா் திமுக உள்ளிட்ட 15 உறுப்பினா்கள் ஆதரவினையடுத்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.