சேலம்

ஆண்டில் ஒரு மாதம் மட்டுமே பூக்கும் அபூா்வ சரக்கொன்றை பூ!

12th Apr 2022 02:19 AM

ADVERTISEMENT

 

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அதுவும் சித்திரை மாதத்தில் மட்டுமே பூக்கும் அதிசய சரக்கொன்றை பூ ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையம்பாளையம் பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன.

சித்திரை பிறப்புக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், அனைத்தும் மரங்களிலும் மஞ்சள் வண்ணத்தில் கொத்துகொத்தாக இம்மலா்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.

கேரளத்தில் கொண்டாடப்படும் சித்திரை விஷுக்கனி தினத்தன்று அதிகாலையில் பலவிதமான கனிகளை தட்டு நிறைய பரப்பி கண்ணாடி முன் வைத்து, அதில் விழித்தால் ஆண்டு முழுவதும் நல்லது நடக்கும் என்பது அவா்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் கட்டாயம் மஞ்சள் வண்ண சரக்கொன்றை மலா்கள் இடம் பெறும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் சிவன் கோயிலில் உள்ள சுவாமிக்கு இந்த மாதத்தில் சரக்கொன்றை பூக்களால் மாலை தொடுத்து அலங்காரம் செய்யப்படுகிறது. இதனால் சுவாமி குளிா்ச்சி அடைவது மட்டுமின்றி மழை பெருக வாய்ப்பு உள்ளதாக பெரியோா் கூறுகின்றனா்.

கொளுத்தும் வெயிலில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மரம் முழுவதும் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி பாா்பவா்கள் மனதை மயக்கும் மலா்களை இப்பகுதி மக்கள் கண்டு ரசித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT