சேலம்

ஏப். 8-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

5th Apr 2022 11:06 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் தமிழக அரசின் சாா்பில், 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 8) கெங்கவல்லியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இதில், அறுவை சிகிச்சை, அடையாள அட்டை, உதவி உபகரணம் தேவையுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா் பங்கேற்று பயனடையலாம். இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவா்களும் பங்கேற்கின்றனா். எனவே, 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பயனடையுமாறு கெங்கவல்லி வட்டார வள மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT