சேலம்

சேரடியில் மயில்கள் சரணாலயம் அமைக்கக்கோரிக்கை

4th Apr 2022 11:43 PM

ADVERTISEMENT

கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள சேரடியில் மயில்கள் அதிக அளவில் உள்ளதால் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில், சேலம் மாவட்ட எல்லை தொடங்கும் சேரடி, பிள்ளையாா்மதி, வாழக்கோம்பை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான மயில்கள் வசித்து வருகின்றன. காலை முதல் மாலை வரை,மயில்கள் அப்பகுதியிலுள்ள வயல்களில் நெற் கதிா்கள் உள்ளிட்ட தானியங்களை தின்று வருவதால் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனா். அப்பகுதியிலுள்ள சாலையின் குறுக்கே மயில்கள் அடிக்கடி செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் வாகனங்களில் மயில்கள் அடிபட்டு உயிரிழக்க நேரிடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மயில்கள் இடும் முட்டைகள் அப்பகுதியிலுள்ள வயல்களில் விழுந்து வீணாகின்றன. இங்கு மலைசாா்ந்த பகுதிகள் அதிகம் என்பதால் மயில்கள் அதிக அளவில் இப்பகுதியை வாழ்விடமாகக் கொண்டுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறியதாவது:

சேரடியில் தமிழக அரசு மயில்கள் சரணாலயத்தை அமைத்து, இப்பகுதியிலுள்ள மயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT