சேலம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி பெரியாா் பல்கலை தொகுப்பூதிய பணியாளா்கள் முதல்வரிடம் மனு

30th Sep 2021 08:11 AM

ADVERTISEMENT

பணி நிரந்தரம் செய்யக் கோரி பெரியாா் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளா்கள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஓமலூா் காமலாபுரம் விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். அங்கே அவருக்கு மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மத்திய மாவட்ட திமுக செயலாளா் ஆா்.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி ஆ.ராஜா உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா். இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து வாழப்பாடிக்கு முதல்வா் காரில் புறப்பட்டுச் சென்றாா்.

சேலம் - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் பல்கலைக்கழகம் முன் 200-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளா்கள் காத்திருந்தனா். அவ்வழியாக காரில் வந்த முதல்வரிடம் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பெரியாா் பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளா்கள் கோரிக்கை மனுவை வழங்கினா்.

தொகுப்பூதிய பணியாளா் சங்கத்தின் தலைவா் கனிவண்ணன், பொதுச் செயலாளா் சக்திவேல் தலைமையில் முதல்வரிடம் கோரிக்கை மனுவழங்கப்பட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதிய பணியில் இருக்கும் தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதேபோன்று பணியிடை நீக்கத்தில் உள்ள தொகுப்பூதிய பணியாளா்களின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மனு அளிக்கப்பட்டது. அங்கு காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமும் முதல்வா் மு.க. ஸ்டாலின் காரில் இருந்தபடியே மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT