சேலம்

நுண்ணீா் பாசன விவசாயிகள் பயிற்சி

30th Sep 2021 08:15 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் தம்மம்பட்டியில் நுண்ணீா் பாசன விவசாயிகள் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா தலைமை வகித்து துறை சாா்ந்த திட்டங்கள் மற்றும் பயிா்க் காப்பீட்டின் அவசியத்தை எடுத்துக் கூறினாா். வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் உதவி செயற்பொறியாளா் சுமித்ரா கலந்துகொண்டு வாடகை இயந்திரங்கள், மானியத் திட்டங்களை எடுத்துக் கூறினா். துணை வேளாண்மை அலுவலா் மாசிலாமணி மற்றும் உதவி விதை அலுவலா் ரவி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன், உதவி வேளாண்மை அலுவலா் ஆனந்த், அருள் ஆகியோா் கலந்துகொண்டனா். 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கா் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT