சேலம்

அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை

30th Sep 2021 10:55 PM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக எடப்பாடியில் அதிமுக நிா்வாகிகளுடன் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

எடப்பாடி அரசு பயணியா் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகரச் செயலாளா் ஏ.எம்.முருகன்

தலைமை வகித்தாா். எடப்பாடி நகர , ஒன்றியம், கொங்கணாபுரம் பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி , ஒன்றியப் பகுதியில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தல் குறித்தும், கட்சியின் புதிய உறுப்பினா் சோ்கை தொடா்பாகவும் ஆலோசனைகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் கட்டூா் மணி, பக்கநாடு மாதேஸ், முன்னாள் சோ்மன் டி.கதிரேசன், கூட்டுறவு சங்கத் தலைவா் கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

Tags : எடப்பாடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT