சேலம்

சேலம் பெரியார் பல்கலை.யில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

DIN

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கும் திட்டத்தினை துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறும் வகையில் மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத்துறை தீன்தயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழக பல்கலைக்கழகங்களில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தீனதயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2.66 கோடி ரூபாய் மதிப்பில், 350 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தமிழகத்தில் முதல் முறையாக உயர் கல்வியுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்குவதால் இணையதளம் சார்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் பணி வாய்ப்பு இந்த இளைஞர்களுக்கு கிடைக்கும் என்றும் இதில் 62 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், 3% பழங்குடியினருக்கும், 19% சிறுபான்மையினருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், தீனதயாள் உபாத்தியாயா கௌசல்யா யோஜனா திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT