சேலம்

வடகிழக்குப் பருவமழை: நெடுஞ்சாலையோர கால்வாய்கள் சீரமைக்கும் பணி துவக்கம்

DIN


எடப்பாடி: வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலையோரங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் தூர்வாரும் பணி தொடங்கியது. 

விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக எடப்பாடி நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உள்பட  சங்ககிரி - மேச்சேரி மாநில நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் தூர்வாறும் பணி  மற்றும் சீரமைக்கும்பணிகள் துவங்கப்பட்டது.

சங்ககிரி பிரதான சாலையில் உள்ள சரபங்கா நதி முகதுவாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்றுவரும் பணிகளை கோட்டப்பொறியாளர் எஸ்.சண்முகசுந்தரம் திங்கள் அன்று நேரில் ஆய்வு செய்தார். உதவிக்கோட்டப்பொறியாளர் எம்.குபேந்திரன், உதவிப்பொறியாளர்  அருள்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 25க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கனரக வாகனங்கள் இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். வரும் 25ந்தேதி வரை இப்பணி தொடர்ந்து நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக, சங்ககிரி - மேச்சாலையில் சீரமைப்புபணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலைத்துறையினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா் - உறுப்பினா்கள் நியமனம்: தமிழக அரசு அழைப்பு

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

SCROLL FOR NEXT