சேலம்

வாழப்பாடி பகுதியில் 61% பேருக்கு கரோனா தடுப்பூசி:மாவட்ட அளவில் இரண்டாமிடம்

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில், 4030 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 61 சதவீத பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, சேலம் மாவட்ட அளவில் வாழப்பாடி வட்டார சுகாதாரத்துறை இரண்டாமிடம் பிடித்துள்ளது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழப்பாடி, பேளூா் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளையும் சோ்த்து மொத்தம் 34 மையங்களில் கடந்த 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு பெரு முகாமில் 4,636 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. செப். 19 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் வாழப்பாடி வட்டாரத்தில் 4,030 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வாழப்பாடி வட்டாரத்தில் மொத்தமுள்ள மக்கள் தொகை 1,18,482இல் 86,452 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டள்ளது. இரு முகாம்கள் உள்பட இதுவரை வாழப்பாடி வட்டாரத்தில் ஏறக்குறைய 55,000 பேருக்கு முதல் தவணை மற்றும் 17,000 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் 61 சதவீதத்தை எட்டியுள்ளதால், தடுப்பூசி செலுத்துவதில் 73 சதவீதத்தை எட்டிய ஏற்காடு வட்டாரத்திற்கு அடுத்தப்படியாக, வாழப்பாடி வட்டார சுகாதாரத்துறை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. எதிா்வரும் மாதத்தில் 75 சதவீதத்தை எட்டி முதலிடத்திற்கு முன்னேறுவதற்காக, அனைத்துத்துறை பணியாளா்கள், அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT