சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் ரூ.35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

சேலம்மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் 2,000 மூட்டை பருத்தி, ரூ.35 லட்சத்திற்கு விற்பனையானது.

வாரம் தோறும் சனிக்கிழமை அன்று இம்மையத்தில் பருத்தி மற்றும் எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்கள் பொது ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனா். சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த 2,000 பருத்தி மூட்டைகள் 450 லாட்டுகளாக பிரித்து, கூட்டுறவு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு மொத்த கொள்முதல் செய்தனா். இதில் சுரபி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 7,310 முதல் ரூ.8,799 வரை விலைபோனது.

அதேபோல் பி. டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.7,550 முதல் ரூ. 8,129 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடைபெற்றது. ஈரப்பதமான தட்பவெப்பம் நிலவிவரும் நிலையில், பருத்தி கடந்த வாரத்தை விட சற்றே குறைந்து விற்பனையானதாக ஏலத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறினா்.

இம்மையத்தில் அடுத்த பொது ஏலம் வரும் 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக கூட்டுறவுத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT