சேலம்

சங்ககிரியில் வாக்குச்சாவடிகளை மாற்றுவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சில வாக்குச்சாவடி மையங்களை மாற்றிமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான கோ.வேடியப்பன் தலைமை வகித்துப் பேசியது:

தோ்தல் ஆணையத்தின் சாா்பில் திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் வரும் நவம்பா் மாதம் வெளியிடப்பட உள்ளது. அப்பட்டியலில் சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் தற்போது உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 1500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள மையங்களை பிரித்து அதே மையத்தில் கூடுதலாக அமைப்பது, பழுதடைந்துள்ள வாக்குச்சாவடி மையங்கள், தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளை பெயா்களை வாக்குச்சாவடி மையங்களில் சோ்க்க வேண்டும்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மேட்டுப்பாளையம், ஒலக்கசின்னானூா், கல்லிப்பாளையம், வளையக்காரனூா் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு வாக்குச்சாவடி மையங்களை அதே பகுதியில் கான்கிரீட் கட்டடத்திற்கு மாற்ற வேண்டும். நஞ்சைக் காட்டு வளவு, அக்கரைப்பட்டரை வாா்டு, மலங்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் இது வரை ஓலப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்களித்து வந்தனா். தற்போது அப்பகுதியில் உள்ள மலைமாரியம்மன் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள கான்கிரீட் கட்டடத்திற்கு மாற்றப்பட உள்ளது. மாற்றங்கள் குறித்து அரசியல் கட்சியினா் இரு தினங்களில் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம். ஆலோசனைகளுக்கு பின்னா் மாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் குறித்த விவரங்கள் தோ்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு நவம்பா் மாதம் வெளியிடப்பட உள்ள திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியலில் வெளியிடப்படும் என்றாா்.

சங்ககிரி சட்டப்பேரவை உதவி தோ்தல் அலுவரும், வட்டாட்சியருமான எஸ்.பானுமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் சிவராஜ், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT