சேலம்

பருவமழை இடா்பாடுகளை தவிா்க்க தூய்மைப் பணி முகாம் செப். 20-இல் தொடக்கம்: ஆட்சியா் செ.காா்மேகம்

DIN

சேலம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பருவ மழையினால் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்த்திட ஏதுவாக மாபெரும் தூய்மைப் பணி முகாம் செப்.20 முதல் செப்.25 வரை நடத்தப்படவுள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பருவ மழையினால் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்த்திட ஏதுவாக மாபெரும் தூய்மைப் பணி முகாம் மூலம் கால்வாய்கள் மற்றும் மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எஸ். ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலா் வெ. ஆலின் சுனேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பேசியது:

சேலம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பருவ மழையினால் ஏற்படும் இடா்பாடுகளைத் தவிா்க்க ஏதுவாக மாபெரும் தூய்மைப் பணி முகாம் செப்.20 முதல் செப்.25 வரை நடத்தப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதனால் சேலம் மாநகராட்சியில் ஒரு சில பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அப்பகுதிகளை கண்டறிந்து மழைநீா் தேங்குவதற்கான அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நாள்தோறும் மழை பெய்து வருவதால் மழைநீா் சாலையோரத்தில் தேங்காத வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், நீா்நிலை பகுதிகளில் வெள்ளநீா் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடா்பாக துறை அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், எதிா்வரும் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்க்கும் வகையிலும், குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீா் செல்வதை தடுக்கும் வகையிலும், அதிகப்படியாக தேகமாகும் மழைநீரால் டெங்கு, மலேரியா மற்றும் இதர தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும் வகையிலும் சேலம் மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் கால்வாய்கள் மற்றும் மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு நடுத்தர மற்றும் சிறிய மழைநீா் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடிகால்களில் படிவுகளை அகற்றும் போது வடிகாலில் ஆரம்பப் பகுதியில் இருந்து தொடங்கி வடிகால் இறுதிப்பகுதி வரை எவ்வித விடுதலுமின்றி பணியை முடிக்க வேண்டும். இப்பணிகளில் ஈடுபடும் பணியாளா்களுக்கு தேவைப்படும் முககவசம், கையுறை, கால் உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

மழைநீா் வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு போதுமான தளவாட சாமான்களை முன்னேற்பாடு செய்து தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

இதற்கான செயல் திட்டத்தினை உள்ளாட்சிகளில் உள்ள அனைத்து பொறியாளா்களும் அனைத்து சுகாதார அலுவலா்களுடன் இணைந்து தயாா் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT