சேலம்

உசிலம்பட்டி அருகே ஊட்டச்சத்து விழா

18th Sep 2021 01:22 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி: தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, உசிலம்பட்டியை அடுத்த நல்லிவீரன் பட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பாக குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாராணி தலைமையில் நடைபெற்றது. 

ஊட்டச்சத்து விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எவ்வாறு ஊட்டச்சத்து அதிகரிக்க என்னென்ன வகை உணவுகள் கொடுக்க வேண்டும், ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம், ரத்த சோகையை தடுக்கும் உணவு வகைக, கர்ப்ப கால உணவு முறைகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.  

ADVERTISEMENT

மேலும், ஊட்டச்சத்துக்கு தேவையான காய்கறி தோட்டம் அமைப்பது முக்கியத்துவம் பற்றியும், சித்த மருத்துவம் பற்றியும், யோகா செய்முறை விளக்கமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் பயனாளிகளுக்கு முருங்கை கன்று, பப்பாளி கன்று, மற்றும் பயறு வகை விதைகள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியினை மேற்பார்வையாளர் நிலை 1 பவுன்தாய் ஏற்பாடு செய்திருந்தார், 

இதில், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மனவளக்கலை மன்ற ராஜலட்சுமி மற்றும் ஷோபா, ஆகியோர் கலந்துகொண்டு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இதில், ஏராளமான கர்ப்பிணி பெண்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags : Nutrition Festival Usilampatti
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT